மகாவிஷ்ணு ஹிரண்யனை வதம் செய்து உக்கிரமாக இருந்தபோது, பிரகலாதன் பகவானைப் பிரார்த்தித்து அவரை சாந்தப்படுத்தினான். மகாலக்ஷ்மி ஆனந்தமடைந்து பகவானின் திருமார்பில் நித்யவாஸம் செய்ததால், 'திருவாழ்மார்பன்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஐதீகம்.
மகாலக்ஷ்மி தனது பதியைச் சேர்ந்ததால் 'திருப்பதிசாரம்' என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மூலவர் திருவாழ்மார்பன், திருக்குறளப்பன் என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கமலவல்லி நாச்சியார் என்பது திருநாமம். கருடன், உடையநங்கை, காரி மற்றும் விந்தை ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை அவதரித்த ஸ்தலம். ஹனுமன் பிரார்த்தனைக்கிணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. குலசேகர மன்னன் திருப்பணிகள் செய்ததாகக் கூறப்படுகிறது.
நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 4 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|